/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கடை - நிறுவனம் பதிவு; தொழிலாளர் துறை அறிவிப்பு
/
கடை - நிறுவனம் பதிவு; தொழிலாளர் துறை அறிவிப்பு
ADDED : செப் 25, 2024 12:21 AM
திருப்பூர் : கடை மற்றும் நிறுவனங்கள் பதிவு செய்வதற்கான 2018 மற்றும் 2023ல் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்ட திருத்தம், 2024 ஜூலை 2ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
பத்து அல்லது அதற்கு அதிகமான பணியாளர்களை கொண்ட, 2024 ஜூலை 2ம் தேதிக்கு பிறகு தொடங்கிய கடைகள் மற்றும் நிறுவனங்கள், https://labour.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, 100 ரூபாய் (பார்ம் -ஒய்) பதிவு கட்டணம் செலுத்தி, ஆறு மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த, 24 மணி நேரத்துக்குள், ஆய்வாளர் பதிவு சான்றிதழ் படிவம் -இசட்'ல், இணையதளம் வாழியாக பதிவேற்றம் செய்வார்; பதிவு சான்றிதழ் பதிவேற்றம் செய்யாவிட்டாலும், தானாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
பத்து அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி, தற்போது இயங்கி கொண்டிருக்கும் கடை மற்றும் நிறுவனங்கள், பதிவு கட்டணம் ஏதுமின்றி, 'படிவம் - இசட் பி' என்ற படிவம் வாயிலாக, ஓராண்டுக்குள் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை சரிபார்த்து, ஆய்வாளர் வாயிலாக, 'படிவம் -இசட்' மூலமாக பதிவுச்சான்று வழங்கப்படும்.
இதுகுறித்து தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஜெயக்குமார் கூறுகையில், ''தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட திருத்த விதிகளின்படி, கடை மற்றும் நிறுவனங்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். புதிய வழிமுறைகளை பின்பற்றி, கடைகள் மற்றும் நிறுவனங்களை பதிவு, அறிவிப்பு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.