/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய சதுரங்கம் பள்ளிகளுக்கு உத்தரவு
/
குறுமைய சதுரங்கம் பள்ளிகளுக்கு உத்தரவு
ADDED : ஜூலை 13, 2025 12:40 AM
திருப்பூர் : நடப்பு, 2025 - 2026 ம் கல்வியாண்டுக்கான குறுமைய விளையாட்டு போட்டிகள் ஜூலை மூன்றாவது வாரம் துவங்க உள்ளது.
கடந்தாண்டை போல நடப்பாண்டும் சதுரங்க போட்டியில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியரை கண்டறிய, சதுரங்க போட்டிகளில் மட்டும், 11 வயதுக்கு உட்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பிற போட்டிகள், 14, 17 மற்றும், 19 வயதினருக்கு நடத்தப்படுகிறது.இந்நிலையில், 11 வயதுக்கு உட்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி அளவிலான சதுரங்க போட்டி, 8 மற்றும், 9ம் தேதி நடத்தப்பட்டது.
பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு வரும், 15ம் தேதி, திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம், பல்லடம், அவிநாசி உட்பட ஏழு குறுமையத்திலும் குறுமைய அளவிலான சதுரங்க போட்டியை நடத்தி, தேர் வாகும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரை மாவட்ட போட்டிகளுக்கு பரிந்துரைக்க, குறுமைய செயலாளர்களுக்கு, மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

