/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய தடகள போட்டி: விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை
/
குறுமைய தடகள போட்டி: விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை
ADDED : ஆக 06, 2025 12:24 AM

திருப்பூர்; திருப்பூர் வடக்கு குறுமைய தடகள போட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது.
ஒவ்வொரு பிரிவு விளையாட்டிலும் முதல் மூன்றிடம் பெற்றவர்கள் விவரம்:
100 மீ., 17 வயது மாணவர் பிரிவில், கிேஷார் (மாஸ்கோ நகர் அரசுப்பள்ளி), சஞ்சய் (அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளி), சர்வேஸ்வர் (ஜெய் சாரதா) பள்ளி. 19 வயது பெண்கள் பிரிவில் பவித்ரா, புனிதா (ஜெய்வாபாய் பள்ளி), ஜனனி (ஜெய்சாரதா பள்ளி).
110 மீ., 17 வயது ஆண்கள் பிரிவில், கிேஷார் (மாஸ்கோ நகர் அரசுப்பள்ளி) சஞ்சய் (அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளி) சர்வேஷ்வர் (ஜெய் சாரதா பள்ளி).
300 மீ., 14 வயது பெண்கள் பிரிவில், சக்தி, அஸ்மியா (திருமுருகன் மெட்ரிக் பள்ளி), சங்கீதா (ஜெய்வாபாய் பள்ளி).
600 மீ., ஓட்டம், 14 வயது ஆண்கள் பிரிவில் வெற்றிவேல், ரகுமான் (ஜெய் சாரதா பள்ளி), ஹரிஷ் (விகாஸ் ஜூனியர் பள்ளி); பெண்கள் பிரிவில் நைனிகா, சோபியா (ஜெய்வாபாய் பள்ளி), ஆகிஷா (அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளி).
800 மீ., 17 வயது பெண்கள் பிரிவில், அனன்யா (அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளி), மதுமிதா (ஜெய்வாபாய்), அகர்ஷனா (கொங்கு பள்ளி). 19 வயது மாணவர் பிரிவில், விஷால் (சி.ஏ.எம்.எஸ்.,) சுகுமார் (ஜெய் சாரதா), மாதேஷ்வரன் (பிஷப் பள்ளி).
3,000 மீ., 17 வயது மாணவர் பிரிவில், ரபிக் ரஹ்மான், கமலேஷ் (ஜெய் சாரதா) ஹசன் அகமது (நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி). 19 வயது மாணவியர் பிரிவில், கோபிகா (ஜெய்வாபாய் பள்ளி), ஆன்னி, கோபிகா (நைருதி பள்ளி).
80 மீ., ஓட்டம், பெண்கள் பிரிவில், ஜெனி ஸ்ரீ, மோனிகா (ஜெய்வாபாய் பள்ளி), மோனிஷா (மாஸ்கோ நகர் அரசுப்பள்ளி).
தட்டெறிதல், 14 வயது பெண்கள் பிரிவில், ஸ்ரீவர்ஷா (கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி), கார்த்திகா (இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி), சம்ருத் பிரனிதா (ஜெய்வாபாய் பள்ளி).
நீளம் தாண்டுதல், 14 வயது ஆண்கள் பிரிவில் தர்ஷன் (விகாஸ் ஜூனியர் பள்ளி), அஸ்வத் (இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி), வெற்றிவேல் (அன்னை மெட்ரிக்., பள்ளி); பெண்கள் பிரிவில் அகிஷா (அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி), நைனிகா மற்றும் ஜெனிஸ்ரீ (ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி).
குண்டெறிதல் போட்டியில் ஸ்ரீராம் (ஜெய் சாரதா பள்ளி), பவித்ரன் (கொங்கு மெட்ரிக் பள்ளி), கவுதம் (ஏ.பி.எஸ்., மெட்ரிக் பள்ளி) ஆகியோர், முதல் மூன்றிடம் பெற்றனர்.