/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய தடகள போட்டிகள் துவக்கம்; 60 பள்ளிகள் பங்கேற்பு
/
குறுமைய தடகள போட்டிகள் துவக்கம்; 60 பள்ளிகள் பங்கேற்பு
குறுமைய தடகள போட்டிகள் துவக்கம்; 60 பள்ளிகள் பங்கேற்பு
குறுமைய தடகள போட்டிகள் துவக்கம்; 60 பள்ளிகள் பங்கேற்பு
ADDED : ஆக 21, 2025 08:18 PM

உடுமலை; உடுமலை குறுமைய அளவிலான தடகள விளையாட்டுப்போட்டிகள் துவங்கியது.
பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திறன்களை அடையாளப்படுத்துவதற்கு, குறுமைய போட்டிகள் நடத்தப்படுகிறது. உடுமலை குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் ஜூலை மாதம் துவங்கியது. சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இப்போட்டிகளை நடத்துகிறது.
ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவு மாணவர்களுக்கான குழு விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. தொடர்ந்து மாணவர்களுக்கான தடகளப்போட்டிகள் உடுமலை அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் துவங்கியுள்ளது.
போட்டியின் துவக்க விழாவில், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் ஆலீஸ் திலகவதி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் அருள்ஜோதி போட்டிகளை துவக்கி வைத்தார்.
போட்டிகளில், 60க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றுள்ளன. விழாவில் வட்டார கல்வி அலுவலர் ரோஜா வானரசி, உடுமலை அரசு கலைக்கல்லுாரி முதல்வர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.