/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய கூடைப்பந்து போட்டி; 23 அணிகள் பங்கேற்பு
/
குறுமைய கூடைப்பந்து போட்டி; 23 அணிகள் பங்கேற்பு
ADDED : ஆக 15, 2025 08:51 PM
உடுமலை; உடுமலையில் குறுமைய அளவில் நடந்த, கூடைப்பந்து போட்டியில், 23 அணிகள் பங்கேற்றன
உடுமலையில் குறுமைய அளவிலான குழு விளையாட்டுப்போட்டிகள், கடந்த மாதம் முதல் நடந்து வருகிறது. இதில் 150க்கும் மேற்பட்ட பள்ளி, மாணவ, மாணவியர் பல்வேறு, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
முதல் முறையாக, இப்போட்டிகளை அரசு நடுநிலைப்பள்ளியான சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நடத்தி வருகிறது.
இதன் அடிப்படையில், குறுமைய அளவிலான கூடைப்பந்து போட்டி, குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடந்தது.
மாணவர்களுக்கான பிரிவில் 23 அணிகள் பங்கேற்றன. போட்டிகளை பள்ளி தாளாளர் ஜூலியா துவக்கி வைத்தார். ஜூனியர்களுக்கான கூடைப்பந்து போட்டியில், உடுமலை சீனிவாசா மெட்ரிக் பள்ளி முதலிடம், பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் இரண்டாமிடம் பெற்றன.
சீனியர் பிரிவில், உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி முதலிடம், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றன.
சூப்பர் சீனியர் பிரிவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் இரண்டாமிடம் பெற்றன.
போட்டிகளை சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பொறுப்பு தலைமையாசிரிர் ஆலீஸ்திலகவதி, உடற்கல்வி ஆசிரியர் விஜயபாண்டி ஒருங்கிணைத்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி தாளாளர், தலைமையாசிர்கள், மற்றும் முதல்வர்கள் பாராட்டினர்.