ADDED : ஜூலை 28, 2025 10:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் தெற்கு குறுமைய மாணவர் பிரிவு, கோ கோ போட்டி, நெருப்பெரிச்சலில் உள்ள திருமுருகன் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நடந்தது.
போட்டிகளை பள்ளி முதல்வர் சுதா மோகன் துவக்கி வைத்தார். 14 வயது பிரிவில், 9 அணிகள் பங்கேற்றன. சின்னசாமி அம்மாள் பள்ளி அணி, 12 - 8 என்ற புள்ளி கணக்கில் அனுப்பர்பாளையம் அரசுப்பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவில், 12 அணிகள் பங்கேற்றன.
இதில், திருமுருகன் மெட்ரிக் பள்ளி, 11-9 என்ற புள்ளி கணக்கில் மெஜஸ்டிக் கான்வென்ட் பள்ளி அணியை வென்றது. 19 வயது பிரிவில், 8 அணிகள் பங்கேற்றன. இதில், 7-5 என்ற புள்ளி கணக்கில் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அணி, சின்னசாமி அம்மாள் பள்ளி அணியை வென்றது.

