/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய திறனாய்வு போட்டி; 'சென்சுரி' மாணவி முதலிடம்
/
குறுமைய திறனாய்வு போட்டி; 'சென்சுரி' மாணவி முதலிடம்
குறுமைய திறனாய்வு போட்டி; 'சென்சுரி' மாணவி முதலிடம்
குறுமைய திறனாய்வு போட்டி; 'சென்சுரி' மாணவி முதலிடம்
ADDED : பிப் 01, 2025 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; புத்தக திருவிழாவை முன்னிட்டு, திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், டிச., 8 முதல் ஜன., 25 வரை திறனாய்வு போட்டி நடத்தப்பட்டது.
இதில், திருப்பூர் வட்டார பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். தெற்கு குறுமைய அளவிலான பள்ளிகளில் இருந்து, 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதில், சென்சுரி பள்ளி மாணவி எர்லின் சுதிமா முதலிடம் பெற்றார். இவருக்கு கண்காட்சி அரங்கில், பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவி, ஊக்குவித்த தமிழாசிரியர் காயத்ரி ஆகியோரை, பள்ளி தாளாளர் சக்திதேவி, முதல்வர் ெஹப்சிபாபால் உள்ளிட்டோர் பாராட்டினர்.