/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் மீட்டர் தட்டுப்பாடு புதிய இணைப்பு முடக்கம்
/
மின் மீட்டர் தட்டுப்பாடு புதிய இணைப்பு முடக்கம்
ADDED : பிப் 07, 2024 12:24 AM
திருப்பூர்:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில், பழைய மின் மீட்டருக்கு பதிலாக, டிஜிட்டல் மீட்டர் மாற்றப்பட்டது. இந்நிலையில் இணையதளம் வாயிலாக கணக்கீடு செய்து, கட்டணத்தை நிர்ணயிக்க வசதியாக, 'ஸ்மார்ட்' மின் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
'ஸ்மார்ட்' மின் மீட்டர் பொருத்தும் பணி நடக்க இருப்பதால், 'டிஜிட்டல்' மீட்டர் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால், தமிழகம் முழுவதும், ஒருமுனை மின் இணைப்பு வழங்க மீட்டர் இல்லாமல், பணிகளும், வீடுகளில் பழுதான மீட்டர்களை மாற்றி, புதிய மீட்டர் பொருத்தும் பணியும் மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால், மின் கட்டணத்தை கணக்கிட முடியாமல், கடந்த ஓராண்டில் செலுத்திய, அதிகபட்ச கட்டணத்தை செலுத்த வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது.
மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஸ்மார்ட்' மீட்டர் விரைவில் வந்துவிடும் என, 'டிஜிட்டல்' மீட்டர் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. மாநில அளவில், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், 10 லட்சத்துக்கும் மேல் புதிய 'டிஜிட்டல்' மீட்டர் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் வந்துவிடும்' என்றனர்.

