/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி நல்லாறு குறுக்கே கட்டுவதா?
/
கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி நல்லாறு குறுக்கே கட்டுவதா?
கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி நல்லாறு குறுக்கே கட்டுவதா?
கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி நல்லாறு குறுக்கே கட்டுவதா?
ADDED : அக் 28, 2025 12:53 AM

திருப்பூர்: அவிநாசி ஒன்றிய மா.கம்யூ., செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகம், நகர் மன்ற அனுமதி பெறாமலேயே, கழிவுநீரை சுத்திகரித்து நல்லாற்றில் விட முடிவு செய்தது.
நல்லாற்றின் குறுக்கே, ராக்கியாபாளையம், தேவராயம்பாளையம், உமையஞ்செட்டிபாளையம், திருமுருகன்பூண்டி ஆகிய இடங்களில், நீர் வழிப்பாதையை தடுத்து, கழிவு நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், குடியிருப்புகளுக்குள் தண்ணீர் நுழையும் அபாயம் உள்ளது. இத்தகைய கட்டுமானத்தை உருவாக்குவதற்காக, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் துறை என எந்த துறையிடமும், பூண்டி நகராட்சி நிர்வாகம் உரிய அனுமதி பெறவில்லை.
ஆற்றை மறித்து கட்டு மானங்கள் கட்டுவது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது. நல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டிகள் குறித்து ஆய்வு நடத்தவேண்டும்; முறையான அனுமதி பெறாமலேயே, மக்களின் வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்தியவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

