/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ குமரன் பர்னிச்சர்ஸ் 2 புதிய கிளைகள் திறப்பு
/
ஸ்ரீ குமரன் பர்னிச்சர்ஸ் 2 புதிய கிளைகள் திறப்பு
ADDED : அக் 07, 2024 01:19 AM

திருப்பூர் : திருப்பூர் காங்கயம் ரோடு மற்றும் அவிநாசி ரோட்டில் ஸ்ரீ குமரன் பர்னிச்சர்ஸ் ஷோரூம் திறக்கப்பட்டது.
திருப்பூர் காங்கயம் ரோடு, நல்லுார், நல்லிக்கவுண்டன்நகரில் ஸ்ரீ குமரன் பர்னிச்சர்ஸ் ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது. ஷோரூமை, மத்திய இணை அமைச்சர் முருகன், அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமிகள், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதில், ஸ்ரீ குமரன் பர்னிச்சர்ஸ் உரிமையாளர்கள் ஈஸ்வரன், செல்வராஜ், கோகுல் மற்றும் சஞ்சீத் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாலையில், திருப்பூர், அவிநாசி ரோடு, அணைப்புதுாரில் மற்றொரு கிளை திறக்கப்பட்டது. இதை, காமாட்சிதாச சுவாமிகள், காடேஸ்வரா சுப்ரமணியம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
உரிமையாளர்கள் கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கு மேலாக மரத்தில் பாரம்பரிய அனுபவமிக்க, ஸ்ரீ குமரன் டிம்பர்ஸ் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பில் புதிதாக வடிவமைக்கப்பட்ட பர்மா தேக்கு மற்றும் கேரள தேக்கு பர்னிச்சர் பொருட்கள் விற்பனைக்கு உள்ளது.
வுட்டன் மாடூலர் கிச்சன், இறக்குமதி டிசைன்களை போலவே பர்னிச்சர், உலகதரத்தில் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான அனைத்து பர்னிச்சர் வகைகளும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும். தீபாவளி மற்றும் திறப்பு விழா சலுகையாக உற்பத்தி விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.