/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எஸ்.ஐ., தலையிட்டு அறிவுரை தலைமுடி ஒட்டவெட்டிய மாணவர்கள்
/
எஸ்.ஐ., தலையிட்டு அறிவுரை தலைமுடி ஒட்டவெட்டிய மாணவர்கள்
எஸ்.ஐ., தலையிட்டு அறிவுரை தலைமுடி ஒட்டவெட்டிய மாணவர்கள்
எஸ்.ஐ., தலையிட்டு அறிவுரை தலைமுடி ஒட்டவெட்டிய மாணவர்கள்
ADDED : பிப் 12, 2024 01:02 AM
திருப்பூர்:திருப்பூரில் நடுரோட்டில் வாகன ஓட்டியிடம் தகராறில் ஈடுபட்ட கல்லுாரி மாணவர்களுக்கு, எஸ்.ஐ., அறிவுரை கூறி அனுப்பினார். மறுநாள் தலைமுடியை ஒட்ட வெட்டிவந்து, போலீசாரிடம் மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்.
திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகர் சிக்னல் அருகே, நேற்று முன்தினம் டூவீலரில் கல்லுாரி மாணவர் இருவர் வந்தனர்; மற்றொரு வாகனம் மீது இவர்கள் வந்த டூவீலர் மோதியது. மாணவர்கள் வாகன ஓட்டியிடம் தகராறு செய்துள்ளனர். அவ்வழியாக வந்த அனுப்பர்பாளையம் எஸ்.ஐ., ஜெயச்சந்திரன் மாணவர்களிடம் விசாரித்தார். கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருவது தெரிந்தது.
ரோட்டில் தகராறு செய்தது தொடர்பாக அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி, மாணவர்களின் இரு குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, 'வீட்டில் சொல் பேச்சு கேட்பதில்லை. ரவுடி தோரணையில், 'ஹேர் ஸ்டைல்' வைத்துக்கொண்டு, சரியாக படிக்காமல் சுற்றி திரிகின்றனர்' என்று குடும்பத்தினர் புலம்பினர். ''இருவரின் முடியையும் நன்றாக வெட்டி விட்டு அழைத்து வாருங்கள்'' என்று அறிவுரை கூறி, எஸ்.ஐ., அனுப்பி வைத்தார்.
மாணவர் இருவரும் சலுான் சென்று, நன்றாக முடியை வெட்டிய பின், எஸ்.ஐ.,யை சந்தித்தனர். 'இனிமேல் வீட்டிலும், பொதுவெளியிலும் நல்ல முறையில் நடந்து கொள்வோம்.
படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படித்து ஐ.பி.எஸ்., அதிகாரி ஆவோம்' என்று கூறி, இருவரும் வாழ்த்து பெற்று திரும்பினர்.