/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நால் ரோட்டில் சிக்னல் பழுது; வாகன ஓட்டிகள் குழப்பம்
/
நால் ரோட்டில் சிக்னல் பழுது; வாகன ஓட்டிகள் குழப்பம்
நால் ரோட்டில் சிக்னல் பழுது; வாகன ஓட்டிகள் குழப்பம்
நால் ரோட்டில் சிக்னல் பழுது; வாகன ஓட்டிகள் குழப்பம்
ADDED : ஆக 04, 2025 10:21 PM

பல்லடம்; பல்லடத்தில், கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், பொள்ளாச்சி, அவிநாசி செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் இணையும் நால்ரோடு சிக்னல், வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம். இப்பகுதியில், சிக்னல் முறையாக வேலை செய்வதுடன், போக்குவரத்து போலீசாரும் பணியில் இருந்தால்தான், போக்குவரத்தை கட்டுப் படுத்த முடியும் என்ற நிலை உள்ளது. சில தினங்களாக, நால் ரோடு சிக்னலின் ஒரு பகுதி பழுதடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் குழப்பமடைந்து வருகின்றனர்.
கோவையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வாகனங்களுக்கான சிக்னல் சரிவர வேலை செய்வதில்லை. வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. பழுதான சிக்னலை பராமரித்து, வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் பயணம் செய்வதை போலீசார் உறுதி செய்ய வேண்டும்.