sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சந்திப்பு பகுதியில் சிக்னல் தேவை!  விபத்துகளை தவிர்க்க எதிர்பார்ப்பு

/

சந்திப்பு பகுதியில் சிக்னல் தேவை!  விபத்துகளை தவிர்க்க எதிர்பார்ப்பு

சந்திப்பு பகுதியில் சிக்னல் தேவை!  விபத்துகளை தவிர்க்க எதிர்பார்ப்பு

சந்திப்பு பகுதியில் சிக்னல் தேவை!  விபத்துகளை தவிர்க்க எதிர்பார்ப்பு


ADDED : ஜன 14, 2025 09:28 PM

Google News

ADDED : ஜன 14, 2025 09:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:

உடுமலை அருகே, தேசிய நெடுஞ்சாலையுடன், மாவட்ட முக்கிய ரோடு, இணையும் பகுதியில் விபத்துகளை தவிர்க்க, தானியங்கி சிக்னல் அல்லது ரவுண்டானா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கோவை--திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், முக்கோணம் பகுதியிலிருந்து, ஆனைமலைக்கு செல்லும் மாவட்ட முக்கிய ரோடு பிரிந்து செல்கிறது. மாவட்ட முக்கிய ரோட்டில், வாளவாடி, தேவனுார்புதுார், ஆனைமலை உட்பட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைந்து, பொள்ளாச்சி மற்றும் உடுமலை நோக்கிச்செல்கின்றன.

இந்த சந்திப்பில், டிவைடர், வேகத்தடை உட்பட எவ்வித வசதிகளும் இல்லை. இதனால், தேசிய நெடுஞ்சாலையில், பொள்ளாச்சி, உடுமலை பகுதியிலிருந்து வாகனங்கள் அதிவேகமாக வரும் போது, ஆனைமலை ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகின்றன.

சந்திப்பு அருகே, தேசிய நெடுஞ்சாலையில், பாலம் மற்றும் பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கு பஸ்கள் நிறுத்தும் போது, பிற வாகனங்கள் விலகிச்செல்ல முடிவதில்லை. அப்போது, ஏற்படும் குழப்பத்தில், விபத்துகள் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், ஆனைமலை ரோட்டிலிருந்து திரும்பி உடுமலை நோக்கி செல்லும் போது, அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, தேசிய நெடுஞ்சாலையில், 'பிளிங்கிரிங்' சிக்னல் அமைத்தால், சந்திப்பு பகுதியில், வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்லும்.

அல்லது, ரவுண்டானா அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வாகன ஓட்டுநர்கள் குற்றச்சாட்டாக உள்ளது.






      Dinamalar
      Follow us