ADDED : நவ 03, 2024 11:12 PM

திருப்பூர்; இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நவ., 11ம் தேதி, உலக அமைதி நாளாக அறிவிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது.
இந்த நாளை முன்னிட்டு தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் தினமும் பகல் 11:11 மணிக்கு அமைதி காப்போம் என அழைப்பு விடுத்து, இதை அமல்படுத்தி வருகிறது.
கடந்த இரு மாதங்களாக ஞாயிறு தோறும் காலை அவிநாசியில் இந்நிறுவன ஊழியர்கள் அமைதி ஊர்வலம் நடத்துகின்றனர். அவ்வகையில், நேற்று இந்த ஊர்வலம் அவிநாசி ரத வீதிகளில் நடைபெற்றது.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் முன் துவங்கிய இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற ஊழியர்கள், அமைதி காப்போம் என உறுதி ஏற்றனர். தொடர்ந்து ரத வீதிகள் வழியாக இந்த ஊர்வலம் சென்றது. எஸ்.சி.எம்., ஸ்பின்னிங் மில்ஸ் மேலாளர் பழனிவேல் இதை ஒருங்கிணைத்தார்.
இதில் கலந்து கொண்ட ஊழியர்கள் அமைதியை வலியுறுத்தும் வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.