/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லிட்டில் கிங்டம் பள்ளியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
/
லிட்டில் கிங்டம் பள்ளியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
லிட்டில் கிங்டம் பள்ளியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
லிட்டில் கிங்டம் பள்ளியில் வெள்ளி விழா கொண்டாட்டம்
ADDED : நவ 20, 2024 12:42 AM

திருப்பூர்; திருப்பூர், 15 வேலம்பாயைம் அருகே சோளிபாளையத்தில் உள்ள லிட்டில் கிங்டம் பள்ளியில் வெள்ளி விழா கொண்டாட்டம் நடந்தது.
வெள்ளி விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பள்ளி நிறுவனர் டாக்டர் ஹேமா தேவராஜன் பேசுகையில், ''திருப்பூர் மாவட்டத்தின், முதல் சி.பி.எஸ்.இ., பள்ளியாக துவங்கப்பட்டு, 25 ஆண்டுகளாக கல்விப்பணியில் சிறந்து விளங்கி வருகிறது,'' என்றார்.
பள்ளி தாளாளர் தேவராஜன், கவுரவ விருந்தினராக பங்கேற்று, மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், அதில், பெற்றோரின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கினார்.
இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு தலைப்பின் கீழ் விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு 'டெக்ஸ்டைல்' என்ற தலைப்பில், மாணவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டினர்.
பள்ளி முதல்வர் ரேணு, பள்ளி துணை முதல்வர் லில்லி புஷ்பம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.