/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இசையோடு பாடினால் குறள் ஆர்வம் பெருகும்'
/
'இசையோடு பாடினால் குறள் ஆர்வம் பெருகும்'
ADDED : ஏப் 14, 2025 05:30 AM

திருப்பூர் : ''இசையோடு பாடினால், திருக்குறளைக் கற்கும் ஆர்வம் குழந்தைகளிடம் பெருகும்'' என்று திருப்பூர் தமிழ்ச்சங்கத் தலைவர் டாக்டர் முருகநாதன் கூறினார்.
திருப்பூர் தமிழ்ச்சங்கம், திங்பாப் தமிழா மற்றும் ஸ்ரீ விருக் ஷா இசையாலயா இசை பள்ளி சார்பில், 'விசுவாவசு' ஆண்டு சித்திரை திருநாளை முன்னிட்டு திருக்குறளை இசை மொழியில் வழங்கும் 'குறளிசை' நிகழ்ச்சி திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸில் நேற்று நடந்தது. திருப்பூர் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் முருகநாதன் பேசியதாவது:
'குறளிசை' நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. குழந்தைகளை திருக் குறள் பாட வைத்து, அவர்கள் மூலம் இசையோடு நடந்தது. இசைக்கேற்ப குழந்தைகள் நடனமாடினர்.
திருக்குறளை பாட நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஒவ்வொரு நாளும் திருக்குறளை இசையோடு படிக்கும் போது, பாடும் போது, அவர்களுக்கு மேலும் படிக்க ஆர்வம் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் இதை ஊக்குவிக்க வேண்டும். தமிழில் பேசுவதை, படிப்பதை பின்பற்ற வேண்டும்.
தமிழில் பேசும் போது கிடைக்கும் இன்பம் வேறு எதிலும் கிடைக்காது. தமிழ் புத்தாண்டில் இருந்து, தமிழில் பேசுவேன் என சபதம் எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தமிழ்ச்சங்க செயலாளர் மோகன் கார்த்திக், மேயர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திங்பாப் தமிழா ஷான், ஸ்ரீ விருக் ஷா இசையாலயா இசைப்பள்ளி நிறுவனர் சாதனா மகேஷ்குமார், ஸ்ரீ பைரவ நட்யஷேத்ரா நடனப்பள்ளி நடன இயக்குனர் கனிஷ்கா ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
குறளிசை ஆவணப்படம் மற்றும் இசை வீடியோ ஆல்பம் வெளியிடப்பட்டது. சிறப்பு விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது.