ADDED : ஏப் 19, 2026 11:16 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த சகோதரிகள் மணி, 67, வீராள், 61. திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு, மீண்டும் ஊர் திரும்புவதற்காகத் தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர். அப்போது
கோவையிலிருந்து மயிலாடுதுறை சென்ற 'ஜன் சதாப்தி' எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், இருவரும் அதே இடத்தில் இறந்தனர். ரயில்வே போலீசார் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
