/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அலுவலக பணியாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
அலுவலக பணியாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : மார் 07, 2024 04:28 AM
பல்லடம், : பல்லடம் அரசு கல்லுாரி ஆங்கில துறை சார்பில், அலுவலக பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை பேராசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றார். கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி பேராசிரியர் இளமாறன் பங்கேற்று, ஆங்கில மொழியை கோப்புகளில் கையாள்வது குறித்து விளக்கினார்
இதேபோல், பி.எஸ்.ஜி., கல்லூரி பேராசிரியர் பாலகிருஷ்ணன் உளவியல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
முன்னதாக, பொள்ளாச்சி அரசு கலை அறிவியல் கல்லூரி நிதியாளர் சுப்ரமணியம், 'அலுவலக பணியாளர்கள் விடுப்பு எடுக்கும் விதிமுறைகள், அலுவலக கோப்புகளை கையாளுதல், பதிவேடுகள் பராமரித்தல், ஊதியம் தொடர்பான விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தார்.
மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 10 கல்லூரிகளைச் சேர்ந்த, 22 அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர். பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றுகள் வழங்கப்பட்டன. கல்லுாரி பேராசிரியர் திப்புசுல்தான் நன்றி கூறினார்.

