ADDED : செப் 02, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
கோவை பாரதியார் பல்கலை ‘ரூசா 2.0’ திட்டத்தின் கீழ், திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரி தாவரவியல் துறை சார்பில், பெண்களுக்கான மூலிகை பொருட்கள் தயாரிப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார். தாவரவியல் துறை தலைவர் பாலசரவணன் ஒருங்கிணைத்தார். இயற்கை மூலிகைகளைக் கொண்டு அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள், தனிநபர் பராமரிப்புப் பொருட்கள், மூலிகை சோப், இயற்கை அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் முறைகள் குறித்து மாணவியருக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
