/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடை மருத்துவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
கால்நடை மருத்துவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கால்நடை மருத்துவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கால்நடை மருத்துவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஆக 26, 2025 09:51 PM

உடுமலை; உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரியின் கால்நடை சிகிச்சை வளாகத்தில், நவீன நோய் கண்டறியும் கருவிகளை கையாள, கால்நடை மருத்துவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., சார்பில், கால்நடை மருத்துவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அவ்வகையில், கால்நடை மருத்துவ நிலையங்களில், நவீன நோய் கண்டறியும் கருவிகளை கையாள, கால்நடை மருத்துவர்களுக்கு நான்கு நாட்கள் செயல்முறை பயிற்சி, உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரியின், பெதப்பம்பட்டி கால்நடை சிகிச்சை வளாகத்தில் நடந்தது.
இதில், கால்நடை மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில், மீயொலி பரிசோதனை, ஊடுகதிர் இயக்கவியல் மருத்துவ பயன்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு விழாவில், கால்நடை சிகிச்சையியல் துறை தலைவர் கவுரி வரவேற்றார். கால்நடை பராமரிப்புதுறை மண்டல இணை இயக்குனர் சந்திரன், இணை இயக்குனர் சுகுமார், கால்நடை சிகிச்சை வளாக தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.
கால்நடை மருத்துவ கல்லுாரி முதல்வர் மணிவண்ணன் சான்றிதழ்களை வழங்கினார். கால்நடை அறுவை சிகிச்சை துறை தலைவர் சிவசங்கர் நன்றி தெரிவித்தார்.