ADDED : பிப் 16, 2024 12:42 AM
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மிராக்கல் பவுண்டேசன் சார்பில், மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு இல்ல பணியாளர்களுக்கான ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி காங்கயம் ரோட்டில் உள்ள ஓட்டலில் நடந்தது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா தலைமை வகித்தார். குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளின் குடும்பங்களை வலுப்படுத்துதல் மற்றும் குடும்ப அடிப்படையிலான மாற்று வழி பராமரிப்பினை ஏற்படுத்தி அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பான குடும்ப சூழலை ஏற்படுத்துதல் குறித்து குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுச்சாமி, குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் மற்றும் தயா ஆகியோர் பயிற்சிகளை வழங்கினார்.
மாவட்டத்தில் உள்ள, பத்து குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களை சேர்ந்த இயக்குனர்கள், சமூக பணியாளர்கள் என பலர் பங்கேற்றனர்.