ADDED : நவ 15, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: ஸ்ரீ சத்ய சாய் பாலவிகாஸ் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான திறன் தேடல் நிகழ்ச்சி, திருப்பூர் பி.என். ரோட்டில் உள்ள ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளியில் இன்று (நவ.,15) நடந்தது. இதில் 125 மாணவர்கள் பங்கேற்றனர். பஜன், வேதம் ஒப்பித்தல், கட்டுரை, ஓவியம், மாறுவேடம், ரங்கோலி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பிடம் பெற்றவர்கள், டிச., 24, 25ல் மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மாவட்ட அளவிலான திறன் தேடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீசத்ய சாய் பாலவிகாஸ் மாணவர்கள்.
