/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆகாயத்தாமரை இனி சுமையல்ல மக்கும் பாலிதீன் தயாரிக்கலாம்
/
ஆகாயத்தாமரை இனி சுமையல்ல மக்கும் பாலிதீன் தயாரிக்கலாம்
ஆகாயத்தாமரை இனி சுமையல்ல மக்கும் பாலிதீன் தயாரிக்கலாம்
ஆகாயத்தாமரை இனி சுமையல்ல மக்கும் பாலிதீன் தயாரிக்கலாம்
ADDED : ஆக 31, 2025 06:53 AM

திருப்பூர்: ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்திருக்கும் ஆகாயத்தாமரையை மூலப்பொருளாக பயன்படுத்தி, மண் வளத்துக்கு கேடு விளைவிக்காத உயிரி பாலிதீனாக மாற்றக்கூடிய தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், சென்னை ச வீதா பல்கலைக்கழக கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மைய தலைவர் பேராசிரியர் அசோக்குமார் வீரமுத்து நேற்று கூறியதாவது:
ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரையை அப்புறப்படுத்துவது பெரும் சவாலான பணியாக மாறியிருக்கிறது. இவை, ஏரி, ஆறுகளின் நீரோட்டத்தை தடுத்து, மீன் வளத்தை பாதிக்க செய்யும்.
இந்த தாவரம், இனி ஒரு சுமையல்ல. புதுப்பிக்கத்தக்க மூலப்பொருளாக மாறப் போகிறது என, ஆய்வில் கண்டறிந்துள்ளோம்.
மண்ணில் மக்காமல் மண் வளத்தை மலடாக்கும் பாலிதீனுக்கு மாற்று பொருளுக்கான மூலப்பொருளாக ஆகாயத்தாமரை மாறப்போகிறது. பி.எச்.ஏ., எனப்படும் 'செயல்முறை அபாய பகுப்பாய்வு' முறையில், மண்ணில் இயற்கையாக சிதைந்து விடும் தன்மையை, ஆகாய தாமரையை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் பாலிதீன் பெற்றிருக்கும்.
இதற்கான செயல்முறை மூன்று எளிய படிகளில் அமைகிறது. முதலில், ஆகாயத்தாமரையை அறுவடை செய்து உலர்த்த வேண்டும். அதிலிருந்து, இயற்கையாக கிடைக்கும் 'பாலிமர்'களை பிரித்தெடுக்க வேண்டும்; உயிரி வேதியியல் முறை மூலமாக, அந்த பாலிமர்களை உயர்தர உயிரி பாலிதீனாக மாற்ற முடியும்.
இவை, மண்ணில் விரைவில் மக்கி விடுவதால், தற்போது பயன்பாட்டில் உள்ள ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீனுக்கு சிறந்த மாற்றாக அமையும்.
இதில் இருந்து தயாரிக்கப்படும் பை, பாத்திரங்கள் போன்றவை சுற்றுச் சூழலுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவிக்காது. இத்தொழில்நுட்பத்தை பெரியளவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

