/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சறுக்கும் மணல்... வீணாகும் தண்ணீர்!
/
சறுக்கும் மணல்... வீணாகும் தண்ணீர்!
ADDED : ஜன 22, 2024 01:02 AM

வீணாகும் மின்சாரம்
திருப்பூர் மிலிட்டரி காலனி, நாகாதி வீதியில் பகலிலும் தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது. சரியான நேரத்துக்கு விளக்குகளை அணைத்து மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.
- வின்சென்ட்ராஜ், மிலிட்டரி காலனி. (படம் உண்டு)
குழியை மூடலாமே!
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, ஒற்றைக்கண் பாலம் அருகே நடுரோட்டில் உள்ள குழியை மூட வேண்டும். வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனறர்.
- சங்கர்சதீஷ், ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி வளைவில், சாலை சேதமடைந்து குழியாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். குழியை மூடி சாலையை சரிசெய்ய வேண்டும்.
- அருணாசலம், அரிசிகடை வீதி. (படம் உண்டு)
ரோடு எப்ப போடுவீங்க
திருப்பூர், டி.பி.ஏ., காலனி, காசி விஸ்வநாதர் கோவில் வீதியில் ரோடு போட ஜல்லிக் கொட்டி, ஒரு மாதத்துக்கு மேலாகிறது. தார்ஊற்றி ரோடு போட வேண்டும்.
- விஸ்வநாதன், டி.பி.ஏ., காலனி. (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், சேடர்பாளையம் ரோட்டில், குழாய் உடைந்து தண்ணீர் ரோட்டில் ஓடி வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- சுதர்சன, சேடர்பாளையம். (படம் உண்டு)
திருப்பூர், 32வது வார்டு, சூர்யா காலனியில் தொட்டி நிறைந்து தண்ணீர் அடிக்கடி வீணாகிறது. சரியான நேரத்துக்கு மோட்டர் அணைத்து, தண்ணீரை மிச்சப்படுத்த வேண்டும்.
- தாமோதரன், சூர்யாகாலனி. (படம் உண்டு)
சறுக்கும் மணல்
திருப்பூர், அவிநாசி ரோடு, தண்ணீர்பந்தல் - அம்மாபாளையம் இடையே ரோட்டில் தேங்கியுள்ள மணலை அகற்ற வேண்டும். வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.
- விஜி, அம்மாபாளையம். (படம் உண்டு)
தெருவிளக்கு எரிவதில்லை
திருப்பூர், 47வது வார்டு, நல்லுார், லட்சுமி நகர் எக்ஸ்டென்சன், ஸ்ரீ என்கிளவ் பகுதியில் தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்கை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.
- சிவராமன், நல்லுார். (படம் உண்டு)
கேட்வால்வு மாற்றுங்க...
திருப்பூர், கருமாரம்பாளையம் நடுநிலைப்பள்ளி, விநாயகர் கோவில் பின்புறம் பொது குழாய் கேட் வால்வு பழுதாகி, தண்ணீர் தொடர்ந்து வீணாகிறது. கேட்வால்வு மாற்ற வேண்டும்.
- கிருஷ்ணன், கருமாரம்பாளையம். (படம் உண்டு)
தெருநாய்த் தொல்லை
திருப்பூர், போயம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி வீதியில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.
- போயம்பாளையம். (படம் உண்டு)