/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மீன் விற்பனை மந்தம்: வியாபாரிகள் கவலை
/
மீன் விற்பனை மந்தம்: வியாபாரிகள் கவலை
ADDED : ஜன 22, 2024 12:35 AM
திருப்பூர்;திருப்பூர், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு ஞாயிறுதோறும், 60 டன் மீன்கள் விற்பனைக்கு வரும். நேற்று வரத்து இயல்பாக இருந்த நிலையில், அதிகாலை முதலில் மீன் விற்பனை மந்தமாக இருந்தது.
காலை, 8:00 மணி கடந்த பின்னரும், மீன்கள் விற்பனை குறைவாகவே இருந்தது. விலையும் வரத்தும் சீராக இருந்த நிலையில், மீன் விற்பனை குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து, மீன் வியாபாரிகள் சிலர் கூறுகையில், 'தை மாத வளர்பிறை முகூர்த்தம் வரும் வியாழன் தைப்பூசம் அடுத்தடுத்து விசேஷ தினங்களின்பால், பொங்கல் விடுமுறை முடிந்து பலரும் ஊர் திரும்பாததால், மீன் விற்பனை நேற்று குறைந்தது. மீன்களை வாங்கிச் செல்ல அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வரவில்லை. 40 டன் மீன் மட்டுமே விற்பனையானது,' என்றனர்.