/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுதானிய சாகுபடி ; விவசாயிகளுக்கு பயிற்சி
/
சிறுதானிய சாகுபடி ; விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஜன 04, 2024 12:59 AM
திருப்பூர்: வெள்ளகோவில் வட்டாரம், முத்துார், உடையம் கிராமத்தில், விவசாயிகளுக்கான பயிற்சி வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும், சிறுதானிய பயிர்களான சோளம், கம்பு, ராகி பயிர்களில் விளைச்சலை பெருக்கும் வகையில், விவசாயிகளுக்கு நவீன தொழிற்நுட்பங்கள் மற்றும் புதிய ரகங்கள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் பேசுகையில், ''சிறுதானிய உற்பத்தியை பெருக்க, பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. நுண் சத்து, உயிர உரம் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சியும் வழங்கப்படுகிறது'' என்றார்.
பல்கலை விஞ்ஞானி ரேணுகா தேவி, நெல் தரிசில் உளுந்து சாகுபடி குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை, வேளாண்மை உதவி இயக்குனர் பொன்னுசாமி, வேளாண்மை அலுவலர் செல்வகுமார், துணை வேளாண்மை அலுவலர் விஸ்வநாதன், உதவி வேளாண்மை அலுவலர் சத்திய நாராயணன், 'அட்மா' திட்ட மேலாளர் பூங்கொடி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.