/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
100 விவசாயிகளுக்கு குறுதானிய விதைகள்
/
100 விவசாயிகளுக்கு குறுதானிய விதைகள்
ADDED : மே 24, 2025 12:33 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், நுாறு விவசாயிகளுக்கு குறுதானிய விதை வழங்கப்பட உள்ளது.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் எக்டர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளிடையே சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும்வகையில், வேளாண் துறை மூலம், கடந்த 2023 முதல், தமிழக சிறுதானிய இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரசின் வேளாண் பட்ஜெட்டில், சிறுதானிய இயக்கம் மூலம், குறுதானிய சிறுதளைகள், மாற்றுப்பயிர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 100 விவசாயிகளுக்கு, எள், கேழ்வரகு போன்ற குறுதானியங்கள், சிறுதளைகளாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு, 4 கிலோ குறுதானிய விதைகள் வழங்கப்பட உள்ளது.
மேலும் மற்றொரு இனமான மாற்றுப்பயிர் திட்டத்தில், சிறுதானிய சாகுபடியை பெருக்க, சோளம், கம்பு சாகுபடி செய்வோருக்கு, ஏக்கருக்கு 1,250 ரூபாய் மதிப்பிலான சிறுதானிய வகைகள், உயிர் உரங்கள் மற்றும் அறுவடை மானியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற, விவசாயிகள் தங்கள் போட்டோ, சிட்டா, அடங்கல் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன், அருகிலுள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகவேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.