/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்னவெங்காயம் விலை உயர்வு; பெரியவெங்காயம் சரிவு
/
சின்னவெங்காயம் விலை உயர்வு; பெரியவெங்காயம் சரிவு
ADDED : ஆக 08, 2025 08:17 PM
உடுமலை; உடுமலை உழவர்சந்தையில், சின்னவெங்காயம் விலை உயர்ந்தும், பெரிய வெங்காயம் விலை குறைந்தும் காணப்பட்டது.
உடுமலை உழவர் சந்தைக்கு உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு வருகின்றனர்.
தற்போது, காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ள நிலையிலும், காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது.
சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ.40- 45 வரை விற்றது. பெரியவெங்காயம், 25- 30, மிளகாய், 65 - 72, வெண்டைக்காய், 45 -50, முருங்கைக்காய், 25- 30, பீர்க்கங்காய், 55-65, சுரைக்காய், 20-24, புடலங்காய், 35-40, பாகற்காய், 50-60, தேங்காய், 70-75, முள்ளங்கி, 20-25 விற்கப்பட்டது.
மேலும், பீன்ஸ், 70-80, அவரைக்காய், 50-60, கேரட், 70-76, வாழைப்பழம், 60-70 விற்பனையானது.
கீரை வகைகள் மற்றும் தக்காளி, கத்தரி வரத்து குறைவாக காணப்பட்டது. வெள்ளரிபிஞ்சு தண்டு வரத்து அதிகரித்தது.அதேபோல், உடுமலை, காய்கறி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகளிலும் காய்கறிகளின் விலை சீராக காணப்பட்டது.