/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்னவெங்காயம் வரத்து குறைவு சந்தைகளில் நிலையான விலை
/
சின்னவெங்காயம் வரத்து குறைவு சந்தைகளில் நிலையான விலை
சின்னவெங்காயம் வரத்து குறைவு சந்தைகளில் நிலையான விலை
சின்னவெங்காயம் வரத்து குறைவு சந்தைகளில் நிலையான விலை
ADDED : டிச 26, 2025 06:35 AM

உடுமலை: தேவைக்கேற்ப வரத்து இல்லாததால், சின்னவெங்காயத்தின் விலை சந்தைகளில் அதிகரித்து வருகிறது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்று பாசனத்துக்கு சின்னவெங்காயம் இரு சீசன்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. சாகுபடி செலவு அதிகரித்து, அறுவடையின் போது விலை சரிவால், கடந்தாண்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.
சில மாதங்களுக்கு முன் அறுவடை செய்த போது, பெரும்பாலானவர்கள், சின்னவெங்காயத்தை விற்பனை செய்யாமல் விளைநிலங்களில் இருப்பு வைத்தனர்.
தொடர் மழைக்குப்பிறகு, தரம் பாதிக்கும் என்பதால், இருப்பு செய்த சின்னவெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வரத்துவங்கியுள்ளனர். இருப்பினும் தேவைக்கேற்ப சந்தைகளுக்கு வரத்து இல்லை.
எனவே, சின்னவெங்காயம் கிலோ, 50 - 70 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது. விரைவில், தட்டுப்பாடு அதிகரிப்பால் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

