/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெள்ளக்காடாக மாறுது ஸ்மார்ட் சிட்டி ரோடு
/
வெள்ளக்காடாக மாறுது ஸ்மார்ட் சிட்டி ரோடு
ADDED : நவ 23, 2025 07:05 AM

திருப்பூர்: திருப்பூர் - தாராபுரம் ரோடு, கரட்டாங்காடு பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாநகராட்சி சார்பில் ரோடு அகலப்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது.
சமீப நாட்களாக பெய்யும் மழையில், இந்த ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது.அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூறுகையில், 'சாலை விரிவுபடுத்தப்பட்டு, தரமாக தான் பராமரிக்கப்பட்டது. இருப்பினும், மழைநீர் வழிந்தோடி செல்வதற்கான கட்டமைப்பில் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கின்றனர்.
அதன் விளைவு, மழைநீர், கழிவுநீருடன் சேர்ந்து மழையின் போது பெருக்கெடுக்கிறது. சில நேரங்களில் பெருமழையின் போது, அங்குள்ள வீடு, கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து விடுகிறது; மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

