/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி நிர்வாகிகள் நாளை பதவியேற்பு
/
ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி நிர்வாகிகள் நாளை பதவியேற்பு
ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி நிர்வாகிகள் நாளை பதவியேற்பு
ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி நிர்வாகிகள் நாளை பதவியேற்பு
ADDED : ஜூலை 04, 2025 11:15 PM
திருப்பூர்; திருப்பூர், ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள், நாளை பொறுப்பேற்கின்றனர்.
ஆண்டுதோறும், ஜூலை முதல் தேதி, ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொள்வர். அந்த வகையில், திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா, நாளை, காலை, 10.00 மணிக்கு திருப்பூர் காந்திநகரில் உள்ள ஏ.வி.பி., சி.பி.எஸ்.இ., பள்ளி அரங்கில் நடைபெற உள்ளது.
சங்கத்தின் புதிய தலைவராக, அருள்செல்வம் (சக்ரவர்த்தி பிளாஸ்டிக்ஸ் நிறுவனர் மற்றும் தலைவர்), நிர்வாக செயலாளராக டாக்டர் பொம்முசாமி, தொடர்பு செயலாளராக ஹேமந்த்குமார், பொருளாளராக செல்வம் மற்றும் செயற்குழு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்கின்றனர்.
மும்பையை சேர்ந்த முன்னாள் ரோட்டரி ஆளுநர் சிவராஜ், கவுரவ விருந்தினராக ஐ.எம்.ஏ., முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் முருகநாநன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ரோட்டரி மாவட்ட பொது செயலாளர் சிவப்பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் வக்கீல் லோகநாதன், மண்டல் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தஜோதி, உதவி ஆளுநர் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 'விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது' என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.