தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிளாஸ்டிக் மாசு இன்றி பொலிவுறும் ஊராட்சிகள்

பிளாஸ்டிக் மாசு இன்றி பொலிவுறும் ஊராட்சிகள்

பிளாஸ்டிக் மாசு இன்றி பொலிவுறும் ஊராட்சிகள்


UPDATED : ஆக 24, 2026 04:58 AM

ADDED : ஆக 23, 2026 08:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2026 04:58 AM ADDED : ஆக 23, 2026 08:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில் 26 ஊராட்சிகள் பிளாஸ்டிக் இல்லா மாதிரி ஊராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு 2018 ஆக. 23ல் தொடங்கிய 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' இயக்கத்தின் தொடர்ச்சியாக, ஆக.23 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் 'திருப்பூரில் நல் திருப்பம்' திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் தலா 2 ஊராட்சிகள் வீதம் 26 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இங்கு 28 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். செப்.1 முதல் மாதிரி ஊராட்சிகள் செயல்படத் தொடங்கும். அடுத்த 45 முதல் 90 நாட்களுக்குள் பிற ஊராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

வீடுகளில் 3x3 அடி வீட்டுக்குழி, தெருக்களில் சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகளுக்கு 20x10 அடி தோட்டக்குழி அமைத்து உரமாக்கப்படும். மட்காத பிளாஸ்டிக் கழிவுகள் பொங்குபாளையம் மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்படும்.

துாய்மைப் பணியாளர்களுக்கு தற்போது ரூ.6,000 ஊதியம் வழங்கப்படுகிறது. 41 பெரிய ஊராட்சிகளில் பணிபுரிவோருக்கு தாட்கோ மூலம் கடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடைகள், வணிக நிறுவனங்களிடம் குப்பையின் அளவுக்கு ஏற்ப ரூ.300 முதல் ரூ.1,500 வரை கட்டணம் வசூலித்து, அத்தொகை மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சி வருவாயை துாய்மைப் பணியாளர் நலனுக்கு பயன்படுத்தவும், சி.எஸ்.ஆர்., மூலம் உதவி பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.

நான்கு வகை குப்பைகள்:

ஈரக் கழிவு, உலர் கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்புக் கழிவு என தரம் பிரித்து சேகரிக்கப்படும்.

மாதிரி ஊராட்சிகள்: ஊத்துக்குளி-முத்தம்பாளையம், வேலம்பாளையம்; குடிமங்கலம்-ஆமந்தக்கடவு, மூங்கில்தொழுவு; வெள்ளகோவில்-நாகமநாயக்கன்பேட்டை, பூதப்பாடி; மடத்துக்குளம்-பாப்பான்குளம், சோழமாதேவி; குண்டடம்-கெத்தல்ரெவ், ஜோதியம்பட்டி; மூலனுார்-கோட்டைமருதுார், காளிபாளையம்; உடுமலை-ஜில்லோப்நாயக்கன்பாளையம், குறிஞ்சேரி; அவிநாசி-கருமாபாளையம், தண்டுக்காரன்பாளையம்; பல்லடம்-பணிக்கம்பட்டி, பருவாய்; பொங்கலுார்-காட்டூர், இளவந்தி; திருப்பூர்-சொக்கனுார், வள்ளிபுரம்; காங்கயம்-கீரனுார், தம்மரெட்டிபாளையம்; தாராபுரம்-மணக்கடவு, பொன்னாபுரம்.

மீறினால் நடவடிக்கை
திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, திருப்பூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் தூய்மை கிராமங்கள் உருவாக்கப்பட உள்ளன. பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து, துாய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பொது இடங்கள், சாலைகள், நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதோ, தீ வைத்து எரிப்பதோ கூடாது. விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். வணிக நிறுவனங்கள், தெருவோர கடைகள் உள்ளிட்டவை தங்களிடம் சேரும் குப்பைகளை சேமித்து, தரம் பிரித்து துாய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட பயனாளர் கட்டணத்தையும் முறையாக செலுத்த வேண்டும். துாய்மை பணிகளில் மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்களும், வணிகர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். -
கலெக்டர் மனீஷ் நாரணவரே -
அடையாளம் தொலைகிறது
திருப்பூரின் முக்கிய பிரச்னைகளில் குப்பை மேலாண்மையும் ஒன்று. குப்பை என்பது சுகாதாரம் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; அது மக்களின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் நகரின் மரியாதை தொடர்பானது. நீர்நிலைகள், விவசாய நிலங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. பல இடங்களில் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால், மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பை மேலாண்மையில் அறிவியல் பூர்வமான, முழுமையான திட்டத்தை செயல்படுத்தி, குப்பைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சட்டசபையில் பேசிய எம்.எல்.ஏ. பாலமுருகன்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us