ADDED : டிச 05, 2024 06:23 AM
திருப்பூர்; திருப்பூரில் 'ஸ்மைலி எக்ஸ்போ' வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நாளை (6ம் தேதி) துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.
'ஸ்மைலி ட்ரிப்ஸ் அண்ட் ஈவன்ட்ஸ் நிறுவனம்' திருப்பூரில் நான்கு ஆண்டுகள் வீட்டு உபயோக பொருள் கண்காட்சி மற்றும் விற்பனையை நடத்தியுள்ளது. ஐந்தாவது ஆண்டாக கண்காட்சி மற்றும் விற்பனை, வரும், 6 முதல், 8 ம் தேதி வரை, பல்லடம் ரோடு, லட்சுமி திருமண மண்டபத்தில் நடக்கிறது.
இதன் நிர்வாக இயக்குனர் அருண் கூறியதாவது:
பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல், உணவு தயாரிப்பு மூலப்பொருட்கள், அலுவலகங்களுக்கு தேவையான பொருட்கள், விளையாட்டு பொருட்கள், மின்சாதன பொருட்கள், கட்டட பொருட்கள், மோட்டார் வாகனங்கள் என, அனைத்து பொருட்களை உள்ளடக்கிய, 180 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நுழைவுக்கட்டணம் இல்லை. பத்துக்கும் மேற்பட்ட விளையாட்டுகளை உள்ளடக்கிய சிறுவர்களுக்கான விளையாட்டு அரங்கம் உள்ளது. ஆண்களுக்கான ஆடைகள், ஐந்து ஆயிரம் ரூபாய்க்கும், பெண்களுக்கான கலெக் ஷன் சாரீஸ், 200 ரூபாய் முதலும் விற்பனைக்கு உள்ளது. பர்னிச்சர்கள், குறைந்த பட்ச தவணை தொகையில் வாங்கலாம். சிறப்பு சலுகையாக டாட்டூ, மெகந்தி, மேஜிக் ேஷா இலவசம். தினமும் காலை, 10:00 முதல் இரவு 10:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.