/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆயுள் குறைக்கும் புகை... அறவே ஒழிக்காவிட்டால் பகை!
/
ஆயுள் குறைக்கும் புகை... அறவே ஒழிக்காவிட்டால் பகை!
ஆயுள் குறைக்கும் புகை... அறவே ஒழிக்காவிட்டால் பகை!
ஆயுள் குறைக்கும் புகை... அறவே ஒழிக்காவிட்டால் பகை!
ADDED : மே 31, 2025 05:13 AM

- என்கிற புதுக்கவிதை, புகையின் அபாயத்தை சட்டென புரிய வைக்கிறது. 'புகை நமக்கு பகை' என்பதை அறிந்திருந்தும், 'புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றுப்படுத்து' என, இளைஞர்கள் வேடிக்கையாக சொல்வதுண்டு.
புகைப்பழக்கம் மட்டுமின்றி, புகையிலை சார்ந்த அனைத்து பொருட்களும் உடலின் பல்வேறு பாகங்களை புண்ணாக்கி, ஆயுளை குறைத்துவிடும் என்பதுதான், இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்கின்றனர், மருத்துவர்கள்.
புகை பிடிப்பவர்கள் மட்டுமின்றி, உறவினர்கள் சூழ்ந்துள்ள வீடுகள், பொதுமக்கள் திரண்டுள்ள பஸ் ஸ்டாண்ட், சந்தை உள்ளிட்ட பொது இடங்களில், புகை விடுபவர்களால், அவர்களது நுரையீரல் மட்டுமின்றி, சம்மந்தமே இல்லாமல், அந்த புகையை சுவாசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் நுரையீரலும் பாதிக்கிறது என்பது, மருத்துவ உண்மை.
காற்றில் பறக்கும்உத்தரவு
இதை புகைபிடிப்பவர்கள் அறிந்திருந்தும் கூட, தங்களது போக்கை மாற்றிக் கொள்வதில்லை. இதனால் தான், பொது இடங்களில் புகைப்பிடிக்க அரசு தடை விதித்தது; பொது இடங்களில் புகைபிடிப்போருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது, புகையை போன்று, இந்த உத்தரவும் காற்றில் பறக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரப்படி, உலகளவில், புகைப்பவர்களில், 12 சதவீதம் பேர் நம் நாட்டில் உள்ளனர். புகையிலை தொடர்பான நோயால் ஆண்டுதோறும், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இறக்கின்றனர்.
வரிசைக்கட்டும் வியாதி
''தொழில் நகரமான திருப்பூரில் கூட, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதால், பாதிப்போர் எண்ணிக்கை அதிகம். புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதால், 15 வகையான நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்'' என்கிறார் இந்திய புற்றுநோய் மைய திருப்பூர் மைய புற்றுநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் சதீஷ்குமார்.
மேலும் அவர் கூறியதாவது:
புகையிலை தொடர்புடைய பொருட்களை பயன்படுத்துவதால் நுரையீரல் புற்றுநோய் (கேன்சர்) தொடர்பான இறப்புகளில், 87 சதவீதம் புகையிலை புகைப்பதால் ஏற்படுகிறது.
புகையிலை பொருட்களை பலரும் உட்கொள்கின்றனர்; அவற்றை பற்களில் வைத்து மென்று, புகையிலை ஈரம் நிறைந்ததாக மாற்றுகின்றனர். இது, வாய் மற்றும் தொண்டையில் 'கேன்சர்' ஏற்பட காரணமாகிறது. வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில், 90 சதவீதம் பேர் புகையிலை பயன்படுத்துபவர்கள்.புகைக்காதவர்களை விட, புகைப்பிடிப்பவர்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகம்.
புகைப்பதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படுகிறது. இது, மரணத்துக்கு கூட வழிவகுக்கும். நாள்பட்ட நுரையீரல் அடைப்பு என்பது, நாள்பட்ட சுவாச கோளாறு; இது, சுவாசிப்பதை கடினமாக்குகிறது.
இவர்களால் படிக்கட்டுகளில் ஏறுவது, ஓடுவது உள்ளிட்ட உடல் செயல்பாடுகள் கடினமானதாகவே இருக்கும். 80 சதவீத நாள்பட்ட சுவாசக் கோளாறு பிரச்னை, புகையிலை புகைப்பதால் ஏற்படுகிறது.
(இன்று, உலக புகையிலை எதிர்ப்பு தினம்)
புகையிலை இல்லா எதிர்காலம்!
புகையில்லா எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் தான், ஆண்டுதோறும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மையக்கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தாண்டின் மையக் கருத்து, 'கவர்ச்சிகரமான புகையிலைப் பொருட்கள், இருண்ட நோக்கத்தை அடிப்படையாக கொண்டது' என்பதை சுட்டிக்காட்டுகிறது.
புகையிலை சார்ந்த தயாரிப்பு மேற்கொள்ளும் நிறுவனங்கள் இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான பார்வைக்கு கவர்ச்சிகரமான வடிவில் புகையிலை பொருட்களை தயாரிக்கின்றன; இந்த ஈர்ப்பில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே, இந்தாண்டைய புகையிலை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.