/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கனிம வளங்கள் கடத்தல்; கடும் நடவடிக்கை பாயும்
/
கனிம வளங்கள் கடத்தல்; கடும் நடவடிக்கை பாயும்
ADDED : நவ 08, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் ; கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில், அரசின் முறையான அனுமதியின்றி அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்களில், சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது; அனுமதியின்றி வாகனங்களில் எடுத்துச் செல்வது ஆகியவை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சட்ட விரோதமாக கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் கைப்பற்றப்படும். சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுக்கும் நில உரிமையாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள், கண்காணிப்பு குழுவிடம் புகாராக தெரிவிக்கலாம்.