/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்வோதய சங்க வீதியில் பாம்புகள் படையெடுப்பு
/
சர்வோதய சங்க வீதியில் பாம்புகள் படையெடுப்பு
ADDED : டிச 09, 2024 05:06 AM
திருப்பூர்: திருப்பூர் அவிநாசி ரோடு, காந்தி நகரில், திருப்பூர் சர்வோதய சங்க வளாகம் உள்ளது.
பல ஏக்கர் பரப்பில் உள்ள வளாகத்தின் வடபுறத்தில், சர்வோதய சங்க வீதி உள்ளது. இதில்ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் விஷத்தன்மை கொண்ட பாம்புகள் அடிக்கடி உலா வருகின்றன.
அப்பகுதியினர் கூறுகையில், ''வனத்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம். எந்தப் பயனும் இல்லை. இவ்வளாகத்தில் உள்ள மரங்களில் பல்லாயிரம் வவ்வால்கள் வசிக்கின்றன.இவற்றின் எச்சங்கள் எங்கள் வீடுகளிலும் சுற்றுப்பகுதியிலும் அதிகளவில் விழுகின்றன.
கடும் துர்நாற்றமும், வவ்வால்களால் பரவும் நோய்த்தொற்று அபாயமும் உள்ளது'' என்றனர்.
திருப்பூர் சர்வோதய சங்க செயலாளர் சரவணன் கூறுகையில், 'இப்பிரச்னை குறித்து அப்பகுதியினர் தகவல் அளித்துள்ளனர். அப்பகுதியில் இன்று (9ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.