ADDED : டிச 10, 2025 09:09 AM

பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுார் ஊராட்சி, பால சமுத்திரம் செல்லும் ரோட்டில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் உள்ளது. மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இதில், 15 தொழிற்கூடம் உள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த கதர் கிராம தொழில் வாரியம் தற்போது, பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடக்கிறது.
பல ஆண்டுகள் பயன்பாடு இல்லாமல் மூடி கிடப்பதால், அதன் வளாகம் முழுவதும் அதிக அளவில் முட்புதர் மண்டி உள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிக அளவில் உள்ளன.
வளாகத்தில் இருந்து வெளிவரும் விஷ ஜந்துக்கள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இது தொடர் கதையாக நடந்து வருகிறது. வளாகத்தில் உள்ள முட்புதர்கள் அனைத்தையும் அகற்றி சுத்தப்படுத்த வேண்டும்.
அனைத்து வசதிகளுடன் உள்ள தொழிற்கூடத்தை அரசு சம்பந்தப்பட்ட வேறு துறைக்கு பயன்படுத்தினால் விஷ ஜந்துக்கள் வருவது தடுக்கப்படும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

