/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தொழில் முனைவோர் செயல்பாடு சமுதாயம் பயனடைய வேண்டும்'
/
'தொழில் முனைவோர் செயல்பாடு சமுதாயம் பயனடைய வேண்டும்'
'தொழில் முனைவோர் செயல்பாடு சமுதாயம் பயனடைய வேண்டும்'
'தொழில் முனைவோர் செயல்பாடு சமுதாயம் பயனடைய வேண்டும்'
ADDED : டிச 14, 2024 11:41 PM

திருப்பூர்: ''நல்ல தொழில் முனைவோரின் செயல்பாட்டால், ஒட்டுமொத்த சமுதாயமும் பயனடைய வேண்டும்,'' என, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் பேசினார்.
'மிகச் சாதாரண சூழ்நிலையில் இருந்து அசாதாரண வெற்றிக்கான பயணம்' என்ற தலைப்பில், ஏற்றுமதியாளர் சந்திப்பு நிகழ்ச்சி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில், நேற்று நடந்தது.
சங்க தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். துணை தலைவர் இளங்கோவன், பொதுசெயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர்கள் குமார் துரைசாமி, சின்னசாமி, துணை தலைவர் சரண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துணை குழு தலைவர் தினேஷ் வரவேற்றார். சங்க நிர்வாகிகள், திருப்பூர் ஏற்றுமதி குறித்து நிர்வாகிகள் பேசினர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் பேசியதாவது:
பள்ளிக்கல்வி முடித்த பிறகு, சொந்தமாக தொழில் துவங்கி, கடையில் வேலைபார்த்தேன்; வேட்டி வியாபாரம் செய்தது பல்வேறு அனுபவங்களை வழங்கியது. சுதேசி மற்றும் காதி இயக்கத்துக்கு திருப்பூர் நன்கு அறியப்பட்ட நகரம்.காந்தியடிகள், தமிழகம் வந்த நான்கு முறையும் திருப்பூர் வந்து சென்றுள்ளார்.
வர்த்தக ரீதியான பயணம் ரோஜா படுக்கை போன்றதல்ல; பல்வேறு சவால்களை கடந்து வெற்றி கண்டுள்ளோம். இளம் தொழில் முனைவோர், லாப நோக்கத்துடன் மட்டும் வியாபாரம் செய்ய வேண்டாம்.
உங்களை சார்ந்தவர்கள் மற்றும் சுற்றியுள்ளவர்களும் வளர்ச்சி அடைய வேண்டும். நல்ல தொழில் முனைவோரின் செயல்பட்டால், ஒட்டுமொத்த சமுதாயமும் பயனடைய வேண்டும்.
ஆரோக்கியம், குடும்பம், வணிகம், ரத்த உறவுகள், சமூகம் ஆகிய காரணிகளை, வெற்றிக்காக அனைவரும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.