/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் விளை நிலங்களில் மண் பரிசோதனை
/
பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் விளை நிலங்களில் மண் பரிசோதனை
பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் விளை நிலங்களில் மண் பரிசோதனை
பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் விளை நிலங்களில் மண் பரிசோதனை
ADDED : ஜன 23, 2025 11:40 PM

உடுமலை,  ;மடத்துக்குளம் வட்டாரத்தில், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், அங்கக வேளாண் விவசாய குழுக்கள், மடத்துக்குளம் வட்டாரம், வேடபட்டி மற்றும் சங்கராமநல்லூரில் கடந்தாண்டு தொடங்கப்பட்டது.
அப்போது, விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனை வாயிலாக அங்கக தன்மை சோதனை செய்யப்பட்டு, உயிர் உரங்கள் மற்றும் உயிர்மபூஞ்சான கொல்லிகள் வேளாண் துறை வாயிலாக வழங்கப்பட்டது.
விவசாயிகளை தொடர்ந்து இயற்கை உரங்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டு மண்ணின் அங்கக தன்மை குறித்து அறிய, வேளாண்மை துறையின் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் வாயிலாக, நேற்று சங்கராமநல்லூரில் விவசாயிகளின் நிலங்களில், நேரடியாக மண் பரிசோதனை செய்யப்பட்டது, என மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்தார்.