/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானியத்தில் சோலார் பேனல் விசைத்தறியாளர் வலியுறுத்தல்
/
மானியத்தில் சோலார் பேனல் விசைத்தறியாளர் வலியுறுத்தல்
மானியத்தில் சோலார் பேனல் விசைத்தறியாளர் வலியுறுத்தல்
மானியத்தில் சோலார் பேனல் விசைத்தறியாளர் வலியுறுத்தல்
ADDED : நவ 12, 2025 11:42 PM
பல்லடம்: 'மானியத்தில் சோலார் பேனல்கள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, விசைத்தறி உரிமையாளர்கள், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர். பாலசுப்பிரமணியம் தலைமையிலான நிர்வாகிகள், சென்னையில், மின் துறை அமைச்சர் சிவசங்கரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், '3ஏ2' மின் இணைப்பின் கீழ், ஏறத்தாழ, 1.68 லட்சம் சிறு, குறு விசைத்தறி நிறுவன மின் இணைப்புகள் உள்ளன. இதில், 1.30 லட்சம் மின் இணைப்புகள் அரசு வழங்கும், 1,000 யூனிட் இலவச மின்சாரத்தை மட்டுமே உபயோகிக்கப்படுவதால் எந்த மின்கட்டணமும் இல்லாமல் பயனடைகின்றனர்.
மேற்கு மண்டலத்தில் உள்ள, 38 ஆயிரம் மின் இணைப்புகள், இதற்குள் வருவதில்லை. மாறாக, கடந்த, 2023--24ம் ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால், 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் யூனிட் வரை உபயோகிக்கும் நிறுவனங்களுக்கு மின் கட்டண சுமை அதிகம் உள்ளது.
அழிவின் விளிம்பில் இருக்கும் விசைத்தறிகளையும், இதை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க, விசைத்தறி கூடங்களின் மேற்கூரையில், நெட் மீட்டர் வசதியுடன், 50 சதவீத மானியத்தில் சோலார் மின் தகடுகள் அமைத்து தர தமிழக அரசு உதவ வேண்டும்.
நீண்ட காலமாக வைக்கப்பட்டு வரும் இக்கோரிக்கை நிறைவேறினால், விசைத்தறி தொழில் பாதுகாக்கப்படுவதுடன், பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

