/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீர்வுகள் பின்னலாடை தொழில்துறையினர் பகிர்ந்தனர்; செவிமடுத்த மத்திய அமைச்சக அதிகாரிகள்
/
தீர்வுகள் பின்னலாடை தொழில்துறையினர் பகிர்ந்தனர்; செவிமடுத்த மத்திய அமைச்சக அதிகாரிகள்
தீர்வுகள் பின்னலாடை தொழில்துறையினர் பகிர்ந்தனர்; செவிமடுத்த மத்திய அமைச்சக அதிகாரிகள்
தீர்வுகள் பின்னலாடை தொழில்துறையினர் பகிர்ந்தனர்; செவிமடுத்த மத்திய அமைச்சக அதிகாரிகள்
ADDED : டிச 04, 2025 05:19 AM

திருப்பூர்: சென்னையில் நடந்த, மண்டல அளவிலான குறு, சிறு, நடுத்தரத் தொழில் மேம்பாடு தொடர்பான கலந்துரையாடலில், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் தாங்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை முன்வைத் தனர். இவற்றை மத்திய அமைச்சக அதிகாரிகள் செவிமடுத்தனர்.
மத்திய, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் சார்பில், தொழில்துறையினர் கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை டிரேடு சென்டரில் நேற்று நடந்தது. மாநிலம் முழுவதும் உள்ள, பல்வேறு தொழில் மண்டலங்களில் இருந்து வந்திருந்த, குறு, சிறு தொழில்துறையினருடன் கலந்துரையாடி, பிரதானமாக தொழிலில் சந்திக்கும் பிரச்னைகள்; எதிர்பார்க்கும் தீர்வுகள் குறித்து கேட்டறியப்பட்டது. முன்னதாக திருப்பூரில் நடந்த கலந்துரையாடலில், 40க்கும் அதிகமான கருத்துருக்கள் அளிக்கப்பட்டிருந்தன.
சென்னையில் நேற்று நடந்த கலந்துரையாடலில் திருப்பூரில் இருந்து, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க(சைமா) தலைவர் சண்முகசுந்தரம், பொது செயலாளர் தாமோதரன், 'சிம்கா' தலைவர் விவேகானந்தன், சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாதேஸ்வரன், லகு உத்யோக் பாரதி மாவட்ட தலைவர் ராமன் அழகிய மணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் பின்னலாடை தொழிலில், தற்போது சந்திக்கும் சவால்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும், பேசினர். இதை மத்திய அமைச்சக அதிகாரிகள் செவிமடுத்தனர்.
திருப்பூர் தொழில்துறையினர் கூறியதாவது: நிதி நிர்வாகம், முதலீடு, மூலப்பொருள் வினியோகம், மார்க்கெட்டிங், ஒருங்கிணைந்த நகர்வு, தர நிர்ணயம், தொழில்நுட்பம், ஏ.ஐ., புத்தாக்கம், மேலாண்மை திட்டம் என, 10க்கும் மேற்பட்ட தலைப்புகளில், 6,000க்கும் அதிகமான கருத்துருக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட கருத்துருக்கள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படும். அவர்களது பரிந்துரைகளையும் பெற்று, தேசிய அளவிலான எம்.எஸ்.எம்.இ., கலந்துரையாடலில் சமர்ப்பிக்கப்படும். இம்மாத இறுதியில், டில்லியில் நடக்கும் தேசிய அளவிலான கலந்துரையாடலில், பிரதமர் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும்.
அதன்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, புதிய அறிவிப்பு அல்லது திட்டமாக அடுத்தாண்டு வெளியாக வாய்ப்புள்ளது. கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, எம்.எஸ்.எம்.இ. கலந்துரையாடல் நடத்தியுள்ளது. இதன் வாயிலாக, திருப்பூருக்கு தேவையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

