UPDATED : ஜூலை 14, 2026 07:09 PM
ADDED : ஜூலை 14, 2026 07:02 PM
அவிநாசி அருகே வேலாயுதம்பாளையத்திலுள்ள ரேவதி நர்சிங் இன்ஸ்டியூஷனில், மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தாசில்தார் ஜெகநாதன் தலைமை வகித்தார். அவிநாசி நகராட்சி, 18 வார்டு பகுதிகளிலும் முதல்கட்ட பணிக்காக ஆசிரியர்களை கொண்டு இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. வீடுகளிலுள்ள பொருட்கள் மற்றும் மக்களின் எண்ணிக்கையை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியில், 437 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 74 கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
எரிந்து போன டூவீலர்கள்
திருப்பூர் கே.எஸ்.சி. அரசு பள்ளி அருகே டூவீலர் ஒர்க் ஷாப் உள்ளது. கடையொட்டி, பழைய டூவீலர்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று காலையில் யாரோ டூவீலர்கள் அருகே தீ வைத்து சென்றனர். அந்த தீ, டூவீலர்கள் மீது பரவி எரிய ஆரம்பித்தது. பள்ளிக்கு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வந்த தெற்கு போலீசார் தகவலறிந்து சென்று விசாரித்தனர். தீயை அணைக்கப்பட்டது. யார் தீ வைத்து சென்றனர் என தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
