தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முருங்கை விலை சரிவு

முருங்கை விலை சரிவு

முருங்கை விலை சரிவு


UPDATED : ஜூன் 30, 2026 10:15 PM

ADDED : ஜூன் 30, 2026 10:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 30, 2026 10:15 PM ADDED : ஜூன் 30, 2026 10:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த ஆண்டு கோடை மழை இறுதிவரை பெய்யாததால் முருங்கையில் பூக்கள் உதிராமல் காய்களாக மாறியது. இதனால், வைகாசி வரை முருங்கை வரத்து குறையவில்லை. ஆனி மாதத்தில் வரத்து குறைந்து விலை உச்சம் தொட்டது. கிலோ, 120 ரூபாய் வரை விலை போனது. தற்போது, உள்ளூர் முருங்கைக்காய் அறுவடைக்கு வர இன்னும் ஒரு மாதம் வரை ஆகும். ஆனால், சுத்தமல்லி, உடன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைச்சல் அதிகரித்துள்ளது. வெளியூர் வரத்து அதிகரித்ததால் முருங்கை விலை சரிவை சந்தித்துள்ளது. இதனால், ஒரு கிலோ, 25 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 40 ரூபாய் வரை விலை போகிறது. ஆடி மாதம் முருங்கை சீசன் என்பதால், விலை மேலும் சரியக்கக்கூடும்.

கல்லுாரியில் அறிமுக வகுப்பு

பல்லடம் அரசு கல்லுாரி முதல்வர் ஜெயச்சந்திரன் கூறுகையில், ''பள்ளிக் கல்விக்கும், கல்லூரி கல்விக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து, மாணவர்களின் மனதில் உயர்கல்வியை பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, அறிமுக பயிற்சித் திட்ட நிகழ்வுகள் நாளை (இன்று) துவங்குகிறது. வரும், 8ம் தேதி வரை, நடைபெறும் நிகழ்வுகளில், ஒவ்வொரு நாளும், பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்,'' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us