
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் பழங்கரை ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில், புதிய குடும்ப அட்டை பதிவு செய்வது, குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பது, முகவரி திருத்தம், பெயர்களை நீக்குவது, மொபைல் எண்ணை இணைப்பது உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டது. வட்ட வழங்கல் அலுவலர் சித்தையன், வருவாய் உதவியாளர் கரண், பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் வடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி
திருப்பூர் சரவணபுரம், பல்லகவுண்டம்புதுார் அரசு நடுநிலைப் பள்ளியில் 'தமிழ் கூடல்' நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பெருமாநல்லுார் ஸ்ரீ விக்னேஸ்வரா வித்யாலயா தமிழாசிரியர் ஆழ்வைக்கண்ணன் பங்கேற்று, தமிழ் இலக்கியத்தில் சித்த மருத்துவம் குறித்தும், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்தும் பேசினார். எழுத்தாளர் கனகசிவா தமிழ் மொழி குறித்த சிறப்பு பாடலை பாடினார். நிகழ்ச்சியில், ள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ் ஆசிரியை பூங்கொடி நன்றி கூறினார்.
ஓ.ஏ.பி.,தாரருக்கு இலவச சேலை
சமூக பாதுகாப்புத்துறை சார்பில், தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கு, முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு, இலவச வேட்டி அல்லது சேலை வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கான, 40 ஆயிரத்துக்கும் அதிகமான இலவச வேட்டி, சேலை மாவட்டத்துக்கும் வந்து சேர்ந்தது. அவை, வி.ஏ.ஓ., அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பின்னரே, வினியோகம் துவங்கியுள்ளது. அதன்படி, திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தாலுகா பகுதிகளில், ஓ.ஏ.பி.,தாரர்களுக்கு இலவச வேட்டி அல்லது சேலை வினியோகம் துவங்கியுள்ளது.
சமூக பாதுகாப்புத்துறை சார்பில், தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கு, முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு, இலவச வேட்டி அல்லது சேலை வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கான, 40 ஆயிரத்துக்கும் அதிகமான இலவச வேட்டி, சேலை மாவட்டத்துக்கும் வந்து சேர்ந்தது. அவை, வி.ஏ.ஓ., அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பின்னரே, வினியோகம் துவங்கியுள்ளது. அதன்படி, திருப்பூர் தெற்குமற்றும் வடக்கு தாலுகா பகுதிகளில், ஓ.ஏ.பி., தாரர்களுக்கு இலவச வேட்டி அல்லது சேலை வினியோகம் துவங்கியுள்ளது.