ADDED : ஜூலை 01, 2025 11:44 PM

அலுவலருக்கு பிரிவு உபசார விழா
அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தவர் தவமணி. இவர் ஓய்வு பெற்றதை முன்னிட்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பிரிவு உபசார பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பணி ஓய்வு பெற்ற தவமணியை, பி.டி.ஓ., ரமேஷ்குமார் (பொது), விஜயகுமார் (கிராமம்), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தகுமார், பொறியாளர் மனோஜ்குமார் மற்றும் அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் சால்வை மற்றும் மாலை அணிவித்து பாராட்டி வாழ்த்தினர். இதில், தவமணியின் மனைவி உமா, மகன் நிதிஷ் குமார் மற்றும் உறவினர்களும் பங்கேற்றனர்.
வெள்ளகோவில் அருகிலுள்ள மயில்ரங்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மாதம் கும்பாபிேஷகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 24 நாள் மண்டலாபிேஷக பூஜை நடத்தப்பட்டது. இதன் நிறைவு பூஜையில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தது. முன்னதாக அமராவதி ஆற்றிலிருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து அபிேஷகம் நடத்தினர். மண்டல பூஜை நிறைவையொட்டி பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மண்டல பூஜை நிறைவு
வெள்ளகோவில் அருகிலுள்ள மயில்ரங்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த மாதம் கும்பாபிேஷகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 24 நாள் மண்டலாபிேஷக பூஜை நடத்தப்பட்டது. இதன் நிறைவு பூஜையில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தது. முன்னதாக அமராவதி ஆற்றிலிருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து அபிேஷகம் நடத்தினர். மண்டல பூஜை நிறைவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.