/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் மனு மீது விரைவில் தீர்வு! கூட்டத்தில், சப்-கலெக்டர் 'அட்வைஸ்'
/
விவசாயிகள் மனு மீது விரைவில் தீர்வு! கூட்டத்தில், சப்-கலெக்டர் 'அட்வைஸ்'
விவசாயிகள் மனு மீது விரைவில் தீர்வு! கூட்டத்தில், சப்-கலெக்டர் 'அட்வைஸ்'
விவசாயிகள் மனு மீது விரைவில் தீர்வு! கூட்டத்தில், சப்-கலெக்டர் 'அட்வைஸ்'
ADDED : ஜன 20, 2024 02:33 AM

திருப்பூர்;திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சப்-கலெக்டர் சவுமியா ஆனந்த், தலைமை வகித்தார். அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மங்கலம் கிராமநீரினை பயன்படுத்தும் விவசாயிகள் சங்க தலைவர் பொன்னுசாமி:
திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களை உள்ளடக்கி, மாவட்டத்தின் மிகப்பெரியதாக திருப்பூர் கோட்டம் செயல்படுகிறது. 60 வார்டுகளை கொண்ட மிகப்பெரிய மாநகராட்சியும் கோட்டத்திலேயே அமைந்துள்ளது.
நிர்வாக வசதிகளுக்காக, திருப்பூர் கோட்டத்தை இரண்டாக பிரிக்கவேண்டும். சப்கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் அருகே, சேதமடைந்த நிலையில் உள்ள வேளாண் விரிவாக்க இடுபொருள் மையத்தை இடித்து அகற்றவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பி.ஏ.பி., வாய்க்காலுக்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளாகியும், இழப்பீடு இன்னும் வழங்கவில்லை. எனவே, விரைவாக இழப்பீடு தொகை கிடைக்க ஆவன செய்யவேண்டும்.
இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் மனு அளித்தனர்.
'விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்; நீண்ட நாட்கள் நிலுவையில் வைத்திருக்க கூடாது' என, சப்-கலெக்டர் சவுமியா ஆனந்த், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.