ADDED : டிச 13, 2025 07:08 AM

திருப்பூர்: தாகம் தீர்ப்பது அறச்செயல்; திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம், 2024 -25ம் நிதியாண்டின் முக்கிய திட்டமாக அதிகளவு மக்கள் தினமும் வந்து செல்லும் திருப்பூரில் உள்ள 12 பொது இடங்களில், குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்த முடிவெடுத்தனர். பொதுமக்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் இதை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
திட்டத் தலைவராக, தெற்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் மோகனசுந்தரம் நியமிக்கப்பட்டார். சங்க உறுப்பினர்களின் பங்களிப்புடன் சர்வதேச ரோட்டரி சங்க நிதி உதவியுடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஒரு கருவியின் விலை மதிப்பு ஐந்தாண்டு பராமரிப்பு உத்தரவாதத்துடன் 3.45 லட்சம் ரூபாய். மொத்தம், 12 இடங்களுக்கு 41.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கருவிகள் வாங்கப்பட்டன.
தியாகி குமரன் பஸ் ஸ்டாண்ட், கோவில் வழி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தினசரி மார்க்கெட், தென்னம்பாளையம், மத்திய பஸ் ஸ்டாண்ட், தெற்கு ரோட் டரி மண்டபம் முன்புறம், வடக்கு தாலுகா அலுவலகம், நஞ்சப்பா பள்ளி, ஜெய்வாபாய் பள்ளி (இரண்டு இயந்திரம்), இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, புது பஸ் ஸ்டாண்ட், அனுப்பர்பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளி ஆகிய 12 இடங்களில் பொருத்தப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
சமூகப்பணிகள்: திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் மக்கள் சேவையில் பல்வேறு திட்டங்களை ஆண்டுதோறும் பதவியேற்கும் நிர்வாகிகள் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர். தெற்கு ரோட்டரி மின் மயானம், தெற்கு ரோட்டரி பள்ளி, தற்போது முதியோர் இல்லம் என பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து திருப்பூரில் 12 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் பயன்பாட்டுக்காக நிறுவப்பட்டுள்ளது. இது போன்ற சமூகப் பணிகளுக்கு உதவியாக உள்ள அனைத்து தரப்பினருக்கும் சங்கம் சார்பில் நன்றி.
- சக்திவேல்: முன்னாள் தலைவர்:
