/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெற்கு ரோட்டரி நிர்வாகிகள்நாளை பொறுப்பேற்பு
/
தெற்கு ரோட்டரி நிர்வாகிகள்நாளை பொறுப்பேற்பு
ADDED : ஜூன் 22, 2025 06:50 AM
திருப்பூர் : திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்புவிழா நாளை நடைபெறவுள்ளது.
திருப்பூரின் பழமையான ரோட்டரி சங்கம் திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம். கடந்த 1980ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த ரோட்டரி சங்கம் திருப்பூர் பகுதியில் பல்வேறு சேவை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த சங்கத்தின் 2025 -26ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாளை, 23ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, திருப்பூர் நடராஜா தியேட்டர் ரோடு, தெற்கு ரோட்டரி அரங்கில் நடைபெறுகிறது.
புதிய தலைவராக தமிழரசு ரங்கசாமி, செயலாளராக பினுமோன், பொருளாளராக செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்கவுள்ளனர்.
இதில் ரோட்டரி கவர்னர் தனசேகர், முன்னாள் கவர்னர்கள் நாசர், இளங்குமரன், நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
புதிய நிர்வாகிகள் பதவியேற்று நடப்பாண்டுக்கான புதிய சேவை திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுகின்றனர்.