தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தென்மேற்கு பருவமழை எச்சரிக்கை

 தென்மேற்கு பருவமழை எச்சரிக்கை

 தென்மேற்கு பருவமழை எச்சரிக்கை


ADDED : மே 08, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் துவங்கி செப். வரை நீடிக்கும் தென் மேற்கு பருவமழை, நீர் ஆதாரங்களுக்கு முக்கியப்பங்கு வகிக்கிறது. 'இந்தாண்டு, நாடு முழுவதும் பரவலாக இயல்பை விட கூடுதலான மழைப்பொழிவு இருக்கும்' என வானிலை மையம் கணித்துள்ளது.

கடந்த காலங்களில் நிலவிய கடும் வறட்சி மற்றும் பருவமற்ற மழைப்பொழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்த அறிவிப்பு நம்பிக்கையை அளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளான அவிநாசி, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நுாற்றுக்கணக்கான குளம், குட்டைகள் உள்ளன. இவை, வெறும் நீர்நிலைகள் மட்டுமல்ல, அந்தந்தப் பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாகும்.நீர்நிலைகள் முறையாகத் துார்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டால் மட்டுமே, பெய்யும் மழைநீரை முழுமையாகச் சேமிக்க முடியும். துார் வாரப்பட்ட குளங்களில் சேமிக்கப்படும் நீர், மழைக்காலம் முடிந்த பின் வறண்ட மாதங்களிலும் விவசாயத்திற்கு கைகொடுக்கும்.

கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட குடிமராமத்து திட்டத்தின் கீழ், பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த குளம் மற்றும் குட்டைகள் புனரமைக்கப்பட்டன. இதன் பயனாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, கிராமப்புறங்களில் பசுமை திரும்பியதுடன் குடிநீர் தட்டுப்பாடும் நீங்கியது.

அதே போன்ற முனைப்புடன், இந்தாண்டும் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் போது, நீர்நிலைகள் தயார் நிலையில் இல்லையெனில் உபரி நீர் வீணாக வெளியேறிவிடும். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் வரத்து வாய்க்கால்களைச் சீரமைப்பதன் வாயிலாக மட்டுமே வரவிருக்கும் பருவமழையின் முழுப்பயனையும் நாம் அறுவடை செய்ய முடியும், என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us