/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள் உதிரிபாகங்கள் மாயமாக வாய்ப்பு
/
கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள் உதிரிபாகங்கள் மாயமாக வாய்ப்பு
கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள் உதிரிபாகங்கள் மாயமாக வாய்ப்பு
கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள் உதிரிபாகங்கள் மாயமாக வாய்ப்பு
ADDED : டிச 06, 2024 04:50 AM

திருப்பூர் : திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கேட்பாரற்ற நிலையில் காணப்படுவதால், அவற்றில் இருந்த உதிரிபாகங்கள் திருடு போகும் நிலை உள்ளது.
திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகம், சிறுபூலுவப்பட்டி ரிங் ரோட்டில் உள்ளது. 15 வேலம்பாளையம் - அணைப்பாளையத்தை இணைக்கும் இந்த சாலையில் இருபுறமும் ஆர்.டி.ஓ., அலுவலக ஆய்வாளர்கள் பறிமுதல் செய்த கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லாரி, நான்கு கார் மற்றும் ஆட்டோக்கள் அலுவலக வளாகத்துக்குள் இடது புறம் உள்ள இடத்தை அடைத்தபடி உள்ளது. இடமில்லாமல் வெளிப்புற கேட் அருகேயும், ரோட்டோரத்திலும் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
இப்பகுதியில் 'சிசிடிவி' கேமரா இல்லை. சனி, ஞாயிறு விடுமுறையின் போது அலுவலர்கள் யாரும் வருவதில்லை. அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. ரிங்ரோடு என்பதால், இரவில் போக்குவரத்து குறைவு.
இதனால், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் இருந்து உதிரிபாகங்கள் திருடுபோகும் நிலை உள்ளது. வடக்கு வட்டார போக்குவரத்து துறை பறிமுதல் செய்த வாகனங்களை பாதுகாப்பதுடன், அவற்றை ஏலத்தில் விட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.